மேலும்

அத்தியாவசிய உணவுப் பொருட்களை சிறிலங்காவுக்கு விநியோகிக்கும் புரிந்துணர்வு உடன்பாடு

இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று   கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனமும்,  சிறிலங்காவின்  கூட்டுறவு சம்மேளனமும் (COOPFED) இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் சிறிலங்காவின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விடயங்கள் குறித்தும் இதன்போது, இரு தரப்பினரும் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ள சந்தோஷ் ஜா, குறிப்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்தியா-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *