இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு
சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது.
ஓகஸ்ட் 28 ஆம் நாள் நிலவரப்படி, அமெரிக்க டொலருக்கு எதிராக, ரூபாவின் இந்த ஆண்டு சரிவு 5.7% ஆக உள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த வாரத்தில் கடன் வழங்கும் வீதங்கள் சற்று உயர்ந்துள்ளன. சராசரி முதன்மைக் கடன் வீதம் ஒன்பது அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 10.95% ஆக உயர்ந்தது.
அதேவேளை அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடந்த சில நாட்களாக வலுவடைந்து வருகிறது.
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 333.17 ரூபாவில் இருந்து 332.66 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
