எவ்பிஐ சிறப்புக் குழு சிறிலங்கா அனுப்பப்படவில்லை- அமெரிக்க தூதரகம்
சிறிலங்கா திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக, எவ்பிஐ சிறப்புக் குழுவினர் யாரும் சிறிலங்காவிற்கு அனுப்பப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“இணையவழித் திருட்டுகளை விசாரிக்க எவ்பிரு அதிகாரிகள் சிறிலங்கா வருகை” என்ற தலைப்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான செய்திக்குப் பதிலளிக்கும் வகையில்,கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல நாடுகளில் உள்ள வழக்கமான நடைமுறையைப் போலவே, கோரிக்கை விடுக்கப்படும்போது, அந்தந்த நாட்டுத் தரப்பினருடன் சட்ட அமலாக்க ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்க தூதரகத்தில் எவ்பிஐ சட்டத் தூதுவர் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளது என்றும், வேறு சிறப்புக் குழுவினர் யாரும் சிறிலங்காவிற்கு அனுப்பப்படவில்லை என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.
