சிறிலங்கன் விமான சேவை முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தகுதியற்ற பிணையாளர்களை முன்னிலைப்படுத்தியதன் மூலம், நீதிமன்றத்தின் பிணை நிபந்தனைகளை, மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், கபில சந்திரசேனவைக் கைது செய்ய கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். பொதரகம நேற்று பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இறப்பு குறித்த விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
