ஜனவரியில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைக்குறியீட்டின் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 2.3% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.1% ஆக இருந்த நிலையில், இந்த மாதம் மேலும் அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்க அதிகரிப்பு இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் டிசம்பரில் 3.0% ஆக இருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 3.3% ஆக உயர்ந்துள்ளது.
உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்தைப் போலவே, 1.8% ஆக மாறாமல் இருப்பதாகவும், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
