சூரிச்சை சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்
உலக பொருளாதார மன்றத்தின் 56வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அவருடன் நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோவும், சூரிச்சை சென்றடைந்துள்ளார்.
சூரிச் விமான நிலையத்தை அடைந்த அவர்களை, ஜெனீவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக வரவேற்றார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் வெளிநாடுகளின் தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மன்றத்தின் பிரமுகர்களுடன் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.
