ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
ஐ.நா பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல், ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவை கேட்போர் கூடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவரும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.