பணச்சுருக்கத்தில் இருந்து விடுபட்டது சிறிலங்கா பொருளாதாரம்
சிறிலங்காவில் கடந்த 11 மாதங்களாக நீடித்த பணச் சுருக்கம் (deflation) ஓகஸ்ட் மாதம் முடிவிற்கு வந்து, பணவீக்கம் 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது.
11 மாதங்களாக தொடர்ச்சியான பணச் சுருக்கத்திற்குப் பின்னர், ஓகஸ்ட் மாதத்தில் விலைகள் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் இரண்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த விலை உயர்வுக்கு வழிவகுத்தது.
அதே நேரத்தில் போக்குவரத்து மற்றும் வீட்டு பராமரிப்பு செலவுகள் குறைந்துள்ளன.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடு பெப்ரவரியில் 4.2 சதவீதம் சரிந்தது, இது ஜூலை 1960 இல் பதிவு செய்யப்பட்ட மிகக் கடுமையான பணச் சுருக்கத்திற்கு சமமானதாகும்.
சிறிலங்கா மத்திய வங்கி, ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் சுமார் ஐந்து சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
இது ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ள ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 1.2 சதவீதத்தை விட மிக அதிகம்.
