தேசபந்து தென்னகோனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை, ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அவரை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2022 மே 9 ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக கோரி, நடத்தப்பட்ட அரகலய போராட்டக் காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டார்.
புதன்கிழமை, தென்னகோன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதிவான் நிராகரித்த நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
