சிறிலங்காவில் 16 வீதம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்
சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 16 சதவீதமானோர் இருப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின், சிறிலங்காவுக்கான புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பிலிப் வாட், நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்து தமது நியமனப் பத்திரங்களைக் கையளித்தார்.
இதன்போதே, சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலை 24 சத வீதத்தில் இருந்து 16 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பற்ற நிலை 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
