மேலும்

கல்முனையில் ஒருவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது- களத்தில் ஞானசார தேரர்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனையோர், பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

கல்முனைக்கு இன்று சுமார் 50 க்கும் அதிகமான பௌத்த பிக்குகளுடன் வந்த ஞானசார தேரர்,  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம், ஒரு மாதத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி ஒன்றை வழங்கி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து,  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை தவிர்ந்த, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையோர் ஞானசார தேரரின்  உறுதிமொழியை நம்பி தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு  தண்ணீர் கொடுத்து ஞான சார தேரர் போராட்டத்தை முடித்து வைத்தார்.

எனினும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாத்திரம் சாகும் வரை உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார்.

அவரது  முடிவினை ஏற்றுக் கொண்டு  ஏனைய உண்ணாவிரதிகளும் அடையாள உண்ணாவிரதத்தை தற்போது தொடருகின்றனர்.

கல்முனைக்கு ஞானசார தேரர் பயணம் மேற்கொண்டிருந்ததால்,  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

செய்தி உள்ளடக்கமும், படங்களும் – பாறுக் ஷிஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *