மேலும்

சிறிலங்காவில்  கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய கொடையாளர்

சிறிலங்காவில்  மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய கொடையாளராக இருந்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

24 ஆண்டுகளில் 130 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியும் மற்றும் கண்ணிவெடி மாசுபாட்டை 90% குறைக்க உதவியும், சிறிலங்காவில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கு அமெரிக்காவே மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்து வருகிறது.

பாதுகாப்பான நிலம் என்பது குடும்பங்கள் இருப்பிடம் திரும்புவதையும், விவசாயிகள் மீண்டும் தங்கள் விளைநிலங்களுக்கு செல்வதையும், குழந்தைகள் அச்சமின்றி விளையாடுவதையும் குறிக்கிறது.

தெளிவான நோக்கங்கள், அளவிடக்கூடிய பெறுபேறுகள் மற்றும் நிறைவை நோக்கிய பாதை ஆகியவற்றை கொண்ட பயனுறுதிமிக்க அமெரிக்க வெளிநாட்டு உதவிகளுக்கான இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோவின் தொலைநோக்கு பார்வையை எவ்வாறு இந்த முன்னேற்றம் பிரதிபலிக்கிறது என்பதை கண்ணிவெடி அகற்றல் கொடையாளர் மாநாட்டில் அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் மயர்ஸ் எடுத்துரைத்தார்.

எஞ்சியுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் சிறிலங்கா முன்னணி வகிக்கும் நிலையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார்.

கண்ணிவெடிகள் இல்லாத நாடு என்ற இலக்கை சிறிலங்கா எட்டும்போது, அது சிறிலங்கா மக்களுக்கான மைல் கல்லாக மட்டுமின்றி, அமெரிக்க உதவியும் மற்றும் வலுவான உள்ளூர் பங்காண்மைகளும் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாகவும் அமைகிறது.

இந்த முக்கியமான பணியின் இறுதி அத்தியாயத்தை சிறிலங்கா முன்னின்று நடத்துவதைக் காண நாம் ஆவலுடன் இருக்கிறோம் என்றும் அமெரிக்க தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *