ஷிரந்தி ராஜபக்ச கைது
சிறிலங்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், ஷிரந்தி ராஜபக்சவை அவரது இல்லத்தில் வைத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதையடுத்து, அரச வங்கி ஒன்றிலிருந்து 10 மில்லியன் ரூபாவை முறைகேடான முறையில் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவரான பிரதீப் காரியவசம், அந்தக் கணக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டார்.
