சிறிலங்காவில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92- பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, ரூ. 414 ஆகவும் விற்கப்படும்.
ஓட்டோ டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ. 382 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
