டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ ட்ரோன்களை பயன்படுத்தும் சிறிலங்கா
மிக மோசமான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, சிறிலங்கா இராணுவத்தின் ட்ரோன்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 50,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு வைரசைப் பரப்பும் நுளம்புகளின் வாழ்விடங்களைக் கண்டுபிடித்து அவற்றைக் கட்டுப்படுத்த சிறிலங்கா இராணுவத்தின் கருவிகளைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுளம்புக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய மூன்று நாள் டெங்கு தடுப்புப் பரப்புரையின் ஒரு பகுதியாகவே இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
