கொழும்பு வந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்
இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் ஐராவத், மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் மூலம், இந்திய கடலோரக் காவல்படையிடமிருந்து சிறிலங்கா கடலோரக் காவல்படைக் கப்பலான சுரக்ஷாவிற்குத் தேவையான முக்கிய உதிரி ப்பாகங்களை இந்தக் கப்பல் கொண்டு வந்துள்ளது.
இந்த பயணத்தின் போது, கப்பல் குழுவினர் சிறிலங்கா கடற்படையுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டு ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள்.
மேலும், ‘தூய்மையான சிறிலங்கா’ பிரச்சாரத்திற்கு ஆதரவாக, கொழும்பில் நடைபெறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் கப்பல் குழுவினர் சிறிலங்கா கடற்படையுடன் கைகோர்ப்பார்கள்.
முன்னதாக, இதே வகையைச் சேர்ந்த ஐஎன்எஸ் காரியல் கப்பல், டிசம்பர் 2025-ல் ‘டிட்வா’ புயலின் போது 650 தொன் நிவாரணப் பொருட்களுடன் சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, புயலின் போது சேதமடைந்த பாலங்களை புனரமைப்பதற்காக, 2026 பெப்ரவரியில் 10 பெய்லி பாலங்களை இந்தக் கப்பல் கொண்டு வந்தது.

