எரிபொருள் மானியத்தை நிறுத்த அனைத்துலக நாணய நிதியம் அழுத்தம்?
சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை அனைத்துலக நாணய நிதியம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம் சிறிலங்காவுக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளது.
இதையடுத்து, இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக என, அனைத்துலக நாணய நிதியக் குழுவின் தலைவர் இவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துலக நாணய நிதியம் செயற்பட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டில் 60 தொடக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு குறைந்துள்ளது.
தற்போது சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள 100 பில்லியன் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மானிய திட்டம் தற்காலிகமானது.
அது எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் நிறைவடைய வாய்ப்புள்ளது. அந்த மானியத்தின் பயன்பாடு மற்றும் நிலவரத்தைப் பொறுத்து, மானியத் திட்டம் அதற்கு முன்னரே முடிவுக்கு வரக்கூடும்.
அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அனைத்துலக நாணய நிதியக் குழுவின் தலைவர் இவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
