மேலும்

நீர்கொழும்பு சிறைக் கலவரம் – மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் மரணம்

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததை அடுத்தே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது.

25 மற்றும் 39 வயதுடைய அந்த அதிகாரிகள், நேற்று இரவும், இன்று அதிகாலையும் காயங்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறைச்சாலை மோதல்களில்  உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் நாள்களில் சிறைச்சாலைக்குள்  வெடித்த இந்தக் கலவரத்தில்,  21 கைதிகளும்  உயிரிழந்திருந்தனர்.

காயமடைந்த பல சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு  ஆதார மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *