கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தியப் போர்க்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
142.5 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பலில் 403 கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.
விநியோகத் தேவைகளுக்காக கொழும்புத் துறைமுகம் வந்துள்ள ஐஎன்எஸ் சற்புரா கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் போது, அதிலுள்ள இந்திய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.