செம்மணிப் புதைகுழியில் 240 ஆக அதிகரித்த எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 44 ஆவது நாள் அகழ்வு இன்று மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய அகழ்வின் போது, 5 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 240ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 235 மனித எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை 227ஆம் இலக்கமிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூடு, கால்களை மடித்து அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இது சைவ முறையில், முறைப்படி புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

