செம்மணிப் புதைகுழியில் இதுவரை 222 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 41 ஆவது நாள் அகழ்வுப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது.
சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், குவியல்களாக போடப்பட்ட எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.