சீனாவுடன் இணைந்து சிறிலங்கா காவல்துறைக்கு புதிய சீருடை
சிறிலங்கா காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சிறிலங்கா காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மீது அனைத்துலக காவல்துறை (INTERPOL) நீல அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஏற்பட்ட ஊடுருவலைத் தொடர்ந்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது குறித்து, மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருவதாக, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், 2017 ஆம் ஆண்டில் தொடங்கிய ஒரு சதியின் விளைவு என்றும் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் சிறிலங்காவும், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து 16 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரகாலச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
திருகோணமலை- கடற்கரையில் பௌத்த பிக்குகளால் அனுமதியின்றி விகாரை அமைக்கும் பணி நேற்றிரவு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.