மேலும்

எண்ணெய் விநியோக உரிமை அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதா?

எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின்தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் கொள்வனவு உடன்பாடு, சிறிலங்காவின் சந்தையில் நுழைந்த எண்ணெய் விநியோக நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதா அல்லது அதற்கு தேவையற்ற நன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“தற்போது, சிறிலங்காவில்  உள்ளூர் நிறுவனமான சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் லங்கா ஐஓசி, சீனாவின் சினோபெக்,  அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம். பார்க்ஸ் என பல எண்ணெய் விநியோக நிறுவனங்கள் உள்ளன.

அமெரிக்க எண்ணெய் நிறுவனத்திற்கு (உள்ளூர்) முகவராக இருக்க அனுமதிப்பதன் மூலமோ அல்லது ஏகபோகத்தை நிறுவுவதன் மூலமோ, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு அதிக நன்மைகளை வழங்குவதற்கு சிறிலங்காஅரசாங்கம் அமெரிக்காவுடன் ஏதேனும் ஒரு உடன்பாட்டை எட்டுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *