செம்மணிப் புதைகுழியில் 88 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நேற்று 19 ஆம் நாளாக , யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் முடிவில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட சட்டத்தரணி நிரஞ்சன்,
ஏற்கனவே ஆழ்ந்தெடுக்கப்பட்ட 67 மனித எலும்பு கூடுகளுடன், மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இதுவரை மொத்தமாக 76 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
வியாழக்கிழமை புதிதாக 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
சிறு போத்தலொன்றும் இரும்புகள் என்று நம்பப்படுகின்ற பல கட்டிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
இன்று 20வது நாளாக அகழ்வு பணிகள் தொடரவுள்ளது.