செம்மணிப் புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 2 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சார்பில் அகழ்வுப் பணிகளை மேற்பார்வையிடும் சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நேற்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே, இரண்டு சிறுவர்களின் எலும்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மனிதப் புதைகுழிகளில், இதுவரையில் 42 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள.
அவற்றில் 37 எலும்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.