எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை- சினோபெக்குடன் தொடர்ந்து பேச்சு
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக சிறிலங்காவின் பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 2 இலட்சம் பீப்பாய்கள் எரிபொருளை சுத்திகரிக்கும் ஆலையை அம்பாந்தோட்டையில் அமைக்க சினோபெக் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
சுத்திகரிக்கப்படும் எரிபொருளில் 20 சதவீதம் உள்நாட்டு சந்தையில் விற்கப்படும் என்றும் , எஞ்சிய எரிபொருள் அந்நியச் செலவாணியை ஈட்டும் வகையில் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தது.
இந்த நிலையில், ஆரம்ப கட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, சினோபெக்கிற்கு 25 ஆண்டு வரி விடுதலையை வழங்க முடியாமல் போனதை அடுத்து, இந்த உடன்பாடு இப்போது பேச்சுவார்த்தையில் உள்ளது.
இதகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க,
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டில் இருப்பதால், அரசாங்கத்தால் சலுகைகளை வழங்க முடியாது.
சினோபெக்கிற்கான வரி சலுகை இப்போது சந்தேகத்திற்குரியது.
அதனை நாங்கள் வழங்கக்கூடிய நிலையில் இல்லை. எனவே தற்போது வரி சலுகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
அதேவேளை, உற்பத்தியில் 20 சதவீதத்தை உள்நாட்டு சந்தையில் விற்க சினோபெக் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், அந்த வெளியீடு உள்ளூர் சந்தை தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகின்றன