செம்மணியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை, 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின், இரண்டாம் கட்ட அகழ்வு நேற்று 8ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வரை, மொத்தம் 40 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் 34 எலும்புக்கூடுகள், முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக 6 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்றும் தொடர்ந்து அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளன.