இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தல் இல்லை- ஜனவரிக்கு பின்னரே பரிசீலனை
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே பரிசீலிக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத், தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், இந்த ஆண்டில் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, மாகாண சபைகளுக்கான சட்ட கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களைத் தாமதப்படுத்தும் முக்கிய பிரச்சினைகளில் எல்லை நிர்ணய சர்ச்சையும் அடங்கும்.இது தேர்தலுக்குத் தயாராவதை தடுத்து நிறுத்தியுள்ளது.
அவசரமாக நடத்தப்படும் தேர்தல்களை விட அர்த்தமுள்ள பரவலாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.