மேலும்

முன்னாள் படைத் தளபதிகளுக்கு உயர் கௌரவ பதவிகள்

சிறிலங்காவின் முன்னாள் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உயர் கௌரவ பதவி நிலைகளை வழங்கினார்.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் த பிளீட் ஆகவும்,  முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலக, மார்ஷர் ஒவ் த எயர் போர்ஸ் ஆகவும் கெளரவ பதவி நிலைகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு இந்த உயர் பதவிகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *