மேலும்

நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்

எதிர்வரும் நொவம்பர் 16ஆம் நாள் சிறிலங்கா அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒக்ரோபர் 7ஆம் நாள் காலை 9 மணி தொடக்கம், 10 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை தொடக்கம், ஒக்ரோபர் 6ஆம் நாள் மதியம் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.

தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “நொவம்பர் 16ஆம் நாள் அதிபர் தேர்தல் – இன்றிரவு வெளியாகிறது அரசிதழ்”

  1. கந்தசாமிசிவராசசிங்கம் says:

    Ranil will support gota by means of blocking premadasa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *