மேலும்

எழுக தமிழில் பங்கேற்க சம்பந்தனுக்கு அழைப்பு – வருவார் என விக்கி நம்பிக்கை

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறும் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடவோ, அல்லது ஆதரவு தெரிவிக்கவோ இல்லை. எனினும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ மாத்திரம், இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனை இந்த நிகழ்வில் பார்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இன்னமும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களில் ஒருவரான சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *