மேலும்

கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தது.

கடந்தவாரமும், வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

அந்த விமானம் எரிபொருள் தேவை மற்றும் விநியோக சேவைகளை பெற்றுக் கொள்வதற்காகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அக்சா உடன்பாட்டுக்கு அமைய, சிறிலங்காவை அமெரிக்கா விநியோக தளமாக பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *