சஹ்ரானின் சகாக்கள் நால்வரின் சடலங்கள் தோண்டியெடுப்பு
அம்பாறை – சாய்ந்தமருதில், கடந்த ஏப்ரல் 26ஆம் நாள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் நால்வரின், சடலங்கள் இன்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டன.
ஐஎஸ். தீவிரவாதிகளான, தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் குடும்பத்தினர் 16 பேர், சாய்ந்தமருதில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த போது, அதனைப் படையினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர்கள், குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தனர்.
கொல்லப்பட்ட 16 பேரில், குழந்தைகள் தவிர ஏனையோரின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், தனியாக புதைக்கப்பட்டன.
நடைபெற்று வரும் விசாரணைக்குத் தேவையான, பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அம்பாறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நான்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் சடலங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன.