பாகிஸ்தான் – சிறிலங்கா கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சு
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவும், பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மொகமட் அப்பாசிக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, பாதுகாப்புடன் தொடர்புடைய கூட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து, கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.