உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடாது – மகாநாயக்கர்களிடம் உறுதி
சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் சீனா தலையீடு செய்யாது என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம், சீனத் தூதுவர் செங் ஷியுவான் உறுதியளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சீனத் தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே அவர், “ உள்நாட்டு சிக்கல்களை சிறிங்கா மக்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். உள்நாட்டு விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையீடு செய்யாது.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்கிறது. 62 ஆண்டுகளாக இடையூறில்லாக உறவுகள் இருந்து வருகின்றன.
இரண்டு நாடுகளும் இன்னமும் நெருக்கமாக நண்பர்களாகப் பணியாற்றுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.