மேலும்

வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமையை விட்டுத்தர முடியாது – பீரிஸ்

அடுத்த அதிபர் வேட்பாளரை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜெயசேகர கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ்,

”அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை மகிந்த ராஜபக்சவே முடிவு செய்வார், அந்த உரிமையை யாருக்கும் விட்டுத் தர முடியாது.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணி, 70 வீதமான வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. எமது தாமரை மொட்டு சின்னமே, அந்த வெற்றியை பிரதிநிதித்துவம் செய்கிறது.

இந்த சின்னத்தையோ, அடையாளத்தையோ எந்தவொரு கூட்டணிக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *