மேலும்

அமைதியைக் குலைத்தால் மீண்டும் வீதிக்கு வருவோம் – யாழ். படைத் தளபதியின் எச்சரிக்கை

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும், வீதிகளில் மீண்டும்  முகாம்களை அமைத்து, சோதனைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார், யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி.

வட்டுக்கோட்டை பகுதியில், சிறிலங்கா இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளம் ஒன்றை பொதுமக்களுக்குக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய  போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிங்கள மக்களும் சிறிலங்கா இராணுவத்தினரும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகின்றனர்.

அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என, தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல்துறையினரும், இராணுவத்தினரும், வீதியோரங்களில் முகாம்களை அமைத்து,   வீதியில் செல்வோரை வழிமறித்துச் சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும்.

அதனால், இந்த அமைதியான வாழ்வை தமிழ் மக்கள் வாழ வேண்டும்.

இந்த அமைதியை யாராவது குலைக்க விரும்பினால், அவர்களுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்காமல், அவர்களை வலுவிழக்கச் செய்து, நாட்டின் அமைதியைப் பேணுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *