மேலும்

சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 407 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்குக் கிடைத்தன.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து, 241 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சிறிலங்காவுக்கு கிடைத்துள்ளன.

மூன்றாவது இடத்திலேயே இந்தியா உள்ளது. இந்தியாவிடம் இருந்து 181 மில்லியன் டொலரும், ஹொங்கொங்கில் இருந்து 125 மில்லியன் டொலரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைத்தன.

2016ஆம் ஆண்டு 26 மில்லியன் டொலர்களாக இருந்த ஜப்பானின் நேரடி வெளிநாட்டு முதலீடு, 2017இல், 51 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவின் முதலீடும், 39 மில்லியன் டொலரில் இருந்து, 76 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் முதலீடு, 10 மில்லியன் டொலரில் இருந்து, 25 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடு, முன்னைய ஆண்டைப் போலவே, 39 மில்லியன் டொலராக தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *