மேலும்

30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு – இன்று தென்படும்

supermoonவழக்கத்தை விட 30 வீதம் அதிக பிரகாசமான சந்திரனை இன்று காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

“முழுமதி நாளான இன்று, சுப்பர் நிலவு என அழைக்கப்படும் அதிக பிரகாசமான- வழக்கத்தை விட பெரியதான சந்திரனைக் காண முடியும்.

இன்று சந்திரன் வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக பிரகாசமானதாகவும் தென்படும். இதனால், உயரமான அலைகள் எழக்கூடும்.

அடிவானத்தில் இருக்கும் போது இன்று மாலை உதயமாகும் போது, அல்லது நாளை அதிகாலை மறையும் போது, அதிக பிரகாசமான இந்த சுப்பர் நிலவை சிறிலங்காவில் இருந்து பார்ப்பது சிறந்தது.

சில வதந்திகள் பரவுவது போல, இந்த சுப்பர் நிலவினால், எந்த இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *