மேலும்

2020 வரை அரசாங்கத்தை மாற்ற இடமளியேன்- சிறிலங்கா அதிபர்

maithri-met-missing (1)2020ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா துறைமுக அதிகார சபையின்  38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்ட வரைவு உடன்பாடு, மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, 2014 செப்ரெம்பர் 4ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அப்போது மகிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார்.

அதற்குப் பின்னர் பதவிக்கு வந்த இந்த அரசாங்கம், சீன நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, அவர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலத்தின் அளவையும், 50 வீதமாக குறைத்து குத்தகை உடன்பாட்டை திருத்தியுள்ளோம்.

துறைமுக நகர உடன்பாட்டிலும், சீன நிறுவனத்துக்கு 240 ஏக்கர் நிலத்தை வழங்க மகிந்த அரசாங்கம் இணங்கியிருந்தது. அதனையும் குறைத்திருக்கிறோம்.

சங்கிரிலா  விடுதி திட்டத்துக்காக வழங்கப்பட்ட 6 ஏக்கர் காணிகளை மாத்திரம் மீளப் பெற முடியாதது துரதிஷ்டம். அது உறுதி மூலம் விற்கப்பட்டிருக்கிறது.

நான் நாட்டின் அதிபராக இருக்கும் வரையில், ஒரு அங்குல நிலத்தையேனும் எந்தவொரு நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ விற்பதற்கு அனுமதிக்கமாட்டேன்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெறும்.

அதற்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களினால் நாட்டையும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் குழப்புவதன் மூலம், இந்த அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

இதனை இத்தகைய குழப்பங்களில் ஈடுபடுவோர் விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *