மேலும்

வடக்கு முதல்வருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு – மயிலிட்டியையும் பார்வையிட்டார்

robert hilton- cmசிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார்.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட்தினால் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை, வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதுவர் திறந்து வைத்தார்.

அண்மையில் சிறிலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பார்வையிட்ட அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது பற்றியும் கடற்றொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.

robert hilton- cmrobert hilton-myliddy

அதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், ரொபேர்ட் ஹில்டன் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக, ரொபேர்ட் ஹில்டன் தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *