மேலும்

சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம

chinese-submarineஇராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

சீன நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி வழங்க மறுத்தது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் சரத் அமுனுகம,  “எமது துறைமுகங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கானது என்பதே சிறிலங்காவின் நிலைப்பாடு. ஏனைய எல்லா நாடுகளும் இங்கு மூலோபாய நலன்களை கொண்டிருக்க முடியாது.  நாம் எல்லோருக்கும் சமம்” என்று குறிப்பிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை தாம் ஆதரிப்பதாகவும், சிறிலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    சின்னநாடுதானே இலகுவில் கடித்துக் குதறி காயப்படுத்தலாம் என எண்ணினால், பாவம் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *