மேலும்

Tag Archives: இந்தோனேசியா

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா

தமது அணை மற்றும் பாதை திட்டத்தில் சில கடன் பிரச்சினைகள் இருப்பதாக, சீனாவின்  துணை நிதி அமைச்சர் சூ ஜியாயி ஒப்புக் கொண்டுள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு  சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார்.

தேர்தலைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்புக் குழு

சிறிலங்காவில் இன்று நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலைக் கண்காணிக்க, நான்கு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

வெள்ளியன்று கொழும்பு வரும் சீனப் போர்க்கப்பல் – அம்பாந்தோட்டைக்கும் செல்கிறது?

இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, சீனப் போர்க்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் 9 போர்க்கப்பல்கள், அடுத்த மாதம் 10ம் நாளுக்கு இடையில், சிறிலங்காவுக்கு வரவுள்ளன.

சிறிலங்காவில் அமெரிக்க விமானப்படை நடத்தும் ஒத்திகைப் பயிற்சி – 13 நாடுகள் பங்கேற்கின்றன

இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்திய விமானப்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் ஏற்பாட்டில், The Pacific Airlift Rally 2017 என்ற விமான ஒன்றுகூடல் மற்றும் பயிற்சி சிறிலங்காவில் நடைபெற்று வருகிறது.

சிறிலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவுக்காகப் போட்டி போடும் அமெரிக்கா- சீனா

ஆசியாவின் சிறிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ளது. சீனாவால் கட்டப்பட்ட இத்துறைமுகத்திற்கு இம்மாதத்தில், இரு வாரங்கள் வரை அமெரிக்க இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.