மேலும்

கட்டுநாயக்கவில் சீனாவின் உதவியுடன் விமானங்களைப் புதுப்பிக்கும் அலகு

slaf-china-1கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில், சீனாவின் உதவியுடன் விமானங்களை புதுப்பிக்கும் அலகு ஒன்றை சிறிலங்கா விமானப்படை புதிதாக உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தொடக்கத்தில் இந்த அலகில், பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இரண்டு பி.ரி-6 ரக பயிற்சி விமானங்களை சீன நிறுவன அதிகாரிகள், சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில் ஜெயம்பதியிடம் நேற்று கையளித்தனர்.

சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள சீனத் தயாரிப்பு போர் விமானங்கள், மற்றும் போக்குவரத்து விமானங்களை பழுதுபார்க்கும், மற்றும் மீளப்புதுப்பிக்கும் நோக்கிலேயே,

சீனாவின் விமான தொழில்நுட்ப ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் துணையுடன் இந்த அலகு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு சீன நிபுணர்கள் தங்கியிருந்து, சிறிலங்கா விமானப்படை பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக சிறிலங்கா விமானப்படையின் இரண்டு பி.ரி-6 பயிற்சி விமானங்களை சீன நிபுணர்கள் புதுப்பித்துக் கொடுத்துள்ளனர்.

slaf-china-1slaf-china-2புதுப்பிக்கப்பட்ட இந்த விமானங்கள் நேற்று சிறிலங்கா விமானப்படைத் தளபதியிடம், சீனாவின் விமான தொழில்நுட்ப ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் அதிகாரிகளால் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா விமானப்படை பொறியாளர்கள் விமானங்களை புதுப்பிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெறும் வரையில், சீன நிபுணர்கள் இங்கு தங்கியிருந்து பயிற்சிகளை அளிக்கவுள்ளனர்.

எனினும் எவ்வளவு காலத்துக்கு சீன நிபுணர்கள் சிறிலங்காவில் தங்கியிருந்த விமானங்களைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வர் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

சீனத் தயாரிப்பு எவ்-7 போர் விமானங்கள், பி.ரி-6 மற்றும் கே-8 பயிற்சி விமானங்கள், வை-8, வை-12, எம்.ஏ-60 போக்குவரத்து விமானங்கள் சிறிலங்கா விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன.

சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து சீனா நிபுணர்கள் விமானங்களைப் புதுப்பிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு  மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *