மேலும்

சிறிலங்கா இராணுவத்துக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் கண்ணிவெடி முறியடிப்புப் பயிற்சி

us-train-ied-sla-1அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர், சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துள்ளனர்.

பூஓயாவில் உள்ள பொறியியல் படைப்பிரிவுத் தளத்தில், சிறிலங்கா படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டுபிடித்து, அழிக்கும் பயிற்சிகளை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் அளித்துள்ளனர்.

முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் நாள் நிறைவடைந்தது.

இதில் சிறிலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த, 4 அதிகாரிகள் மற்றும் 65 படையினர் பங்கேற்றிருந்தனர்.

us-train-ied-sla-1us-train-ied-sla-2us-train-ied-sla-3us-train-ied-sla-4

இவர்களுக்கு அமெரிக்காவின் ஆசிய பசுபிக் முன்னாயத்தமற்ற வெடிபொருள் முறியடிப்புக்கான புல்டன் நிலையத்தைச் சேர்ந்த 4 வெடிபொருள் நிபுணர்களும், ஒரு இலத்திரனியல் முறியடிப்பு நிபுணரும் பயிற்சிகளை அளித்தனர்.

ஐஈடி எனப்படும் முன்னாயத்தமற்ற வெடிபொருள்கள், அவற்றின் அச்சுறுத்தல்கள், முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுதல், நடைமுறைப் பயிற்சிகள், இலத்திரனியல் போர் முறை, புதிய கருவிகள் அறிமுகம், வெடிபொருட்களை செயலிழக்கச் செய்தல், தடயவியல் சான்றுகள், வெடிப்புக்குப் பிந்திய ஆய்வு, சிறப்பு வெடிபொருட்கள் தொடர்பான பயிற்சி, வெடிபொருட்களை அகற்றுவதற்காக நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *