மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு
மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.