மேலும்

நாள்: 12th September 2016

எமது புதைகுழிகளை நாமே தோண்டினோம் – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பொது எதிரியான இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிடுவதற்கு, 1980களின் இறுதியில் பிரேமதாச அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியதானது, சிறிலங்காவின் எந்தவெலாரு அரசாங்கமும் எடுத்திராத மிகவும் விரும்பப்படாத- ஆபத்தான நடவடிக்கை என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

4419 ஏக்கரில் ஒரு அங்குல நிலமும் விடுவிக்கப்படாது – யாழ். படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மைத்திரியின் பிரதிநிதியாக மகிந்த

அணிசேரா நாடுகளின் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளார்.