மேலும்

நாள்: 21st September 2016

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல் சிறிலங்கா அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.

முடிவுக்கு வந்தது சிறிலங்கா படைகளின் ‘நீர்க்காகம்’ கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து, மூன்று வாரகாலமாக மேற்கொண்டு வந்த நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

புலனாய்வு நடவடிக்கைகளை மீளாய்வு செய்யக் கூடாது – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

சிறிலங்காவின் முதன்மையான புலனாய்வுச் சேவையான இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் வீழ்ச்சியைத் தடுக்காவிடின், நாடு கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

போர் பற்றிய தெளிவான படத்தை தனது நூல் வெளிப்படுத்துமாம் – சரத் பொன்சேகா கூறுகிறார்

தாம் விரைவில் வெளியிடவுள்ள நூல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான தெளிவான படத்தை வழங்கும் என்று, சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குறித்தும் ஐ.நா பொதுச்சபையில் பான் கீ மூன் உரை

நியூயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் நிகழ்த்திய தொடக்க உரையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடன் மைத்திரி தொலைபேசியில் பேச்சு – ஊரி தாக்குதலுக்கு கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 18 இந்தியப் படையினர் கொல்லப்பட்டமைக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.