மேலும்

பாரிய கப்பல்களை நிறுத்துவதற்காக திருமலை கடற்படைத் தளத்தில் புதிய இறங்குதுறை

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாரிய கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் புதிய இறங்குதுறை ஒன்றைக் கட்டுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய, திருகோணமலை டொக்யார்ட் தளத்தில் 220 மீற்றர் நீளமும், 20 மீற்றர் அகலமும் கொண்ட விசாலமான இறங்குதுறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய கப்பல்கள் இங்கு தரித்து நிற்கக் கூடிய வசதிகள் கிடைக்கும்.

உலகின் ஆழமான இயற்கைத் துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலைத் துறைமுகமே, ஆசியாவில் இரண்டாவது ஆழம் கூடிய இயற்கைத் துறைமுகமாகும்.

டொக்யார்ட் கடற்படைத் தளம், சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகமாக செயற்படுகிறது.

இங்கு பாரிய கப்பல்கள் தரித்து நிற்பதற்கான இறங்குதுறை ஒன்றை கட்டும் பணிகள் 1990இல் ஆரம்பிக்கப்பட்ட போதும், பல்வேறு காரணங்களால் அது இடைநிறுத்தப்பட்டது.

சிறிலங்கா கடற்படை கடல் ரோந்துப் பணிகளுக்காக நான்கு புதிய பாரிய கப்பல்களை 2017-2019 ஆண்டு காலப்பகுதிக்குள் பெற்றுக் கொள்ளவுள்ள நிலையிலேயே, டொக்யார்ட்டில் புதிய இறங்குதுறையை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *