மேலும்

மாதம்: August 2016

காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரை

புதிதாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காணாமற்போனோர் செயலகத்தின் செயலாளராக மனோ தித்தவெலவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.

திருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இந்திய முதலீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலையில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா படையினரின் வசமுள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மலேசியா கிளம்புகிறார் மகிந்த – மாநாடு, பான் கீ முனை தவிர்க்க முயற்சி

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைச் செயலர் – கூட்டுப் பயிற்சியை ஆய்வு

அமெரிக்காவின் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, திருகோணமலை கடற்படைத் தளத்தில் நடக்கும், கூட்டுப் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை – நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவு அறிக்கை

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு, விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று, தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் புதிய அரசியலமைப்பு – பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படும்

இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு யோசனை, தொடர்பாக மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களை நடத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் வில்லியம் ஈ ரொட் நேற்று சிறிலங்கா வந்துள்ளார்.

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்

கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி விமான நிலையத்தில்  இறங்கிய காட்சியானது, Living Daylights என்கின்ற திரைப்படத்தில் ஜேம்ஸ் பொன்ட் 007 கதாபாத்திரத்திற்காக நடித்த ரிமோதி டல்ரன் என்பவர் சி-130 சரக்கு விமானத்திலிருந்து குதித்த காட்சியை நினைவுபடுத்தியது.

வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

சிறிலங்கா அமைச்சர் சீனாவில் ஆய்வுப் பயணம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில் பாரிய கைத்தொழில் வலயத்தை அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக சிறிலங்காவின் சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.